திண்டுக்கல் மாவட்ட சிறையில் கைதிகளுக்கு வீடியோ காலில் உறவினர்களிடையே பேச கைதிகள் வசதி
திண்டுக்கல் மாவட்ட சிறையில் கைதிகள் வீடியோ கால் பேச தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறையில் கணினி மூலம் வீடியோ கால் பேசும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் பேச கட்டணம் கைதிகளின் வங்கி கணக்கிலிருந்து வசூலிக்கப்படுகிறது. இதனால் சிறையில் உள்ள கைதிகள் எளிதில் பேசி, மன அழுத்தம் இல்லாமல் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: திண்டுக்கல் சிறையில் 200க்கு மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தினமும் 30க்கும் மேற்பட்ட கைதிகள் வீடியோ கால் மூலம் உறவினர்கள், வழக்கறிஞர்களிடம் பேசுகின்றனர் என்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment