எரியோடு அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றசாட்டில் அரசு கல்லூரி விரிவுரையாளர் பணி நீக்கம்
திண்டுக்கல் எரியோடு அருகே தண்ணீர் பந்தம்பட்டியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராக பொள்ளாச்சி சேர்ந்த அருள்செல்வம் பணிபுரிந்து வந்தார். இவர் 3-ஆம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த செப்டம்பர் மாதம் 26 மாணவிகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க கோரி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மாணவிகளையும், பெண் பேராசிரியர்களையும் புகைப்படம் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து போலீஸ் அக்கா-வுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் குணசேகரன் புகார் அளித்த மாணவிகள், பெண் பணியாளர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். அனைவரும் அருள் செல்வம் மீதான புகார்களை உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் கல்லூரி முதல்வர் கீதா(பொ) பாலியல் புகாரில் சிக்கிய கௌரவ விரிவுரையாளர் அருள்செல்வத்தை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment