திண்டுக்கல் அருகே கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1.50 லட்சம் மோசடி ஒருவர் கைது
திண்டுக்கல் அருகே குரும்பட்டியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி(60) இவர் சாணார்பட்டி தவசிமடைய சேர்ந்த ஜோசப்(44) என்பவருக்கு நிதி நிறுவனம் மற்றும் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி 2 தவணையாக ரூ.1.50 லட்சம் வாங்கினார். பிறகு கடன் தரவில்லை. ஜோசப் ஆசைதம்பியிடம் இது பற்றி கேட்டதற்கு ஆசைத்தம்பி பணம் திருப்பி தர முடியாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து ஜோசப் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சாணார்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆசைத்தம்பியை கைது செய்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment