ஆத்துார் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ள சூழலில் நாய்கள்,ஆடுகள் மாயம் மக்கள் அச்சம்
திண்டுக்கல் ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க பகுதியில் புதர்ச்செடிகள் அடர்ந்துள்ளதால் மான், காட்டுப்பன்றி, காட்டுமாடு, மயில் போன்ற விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. சித்தையன்கோட்டை அடுத்த நரசிங்கபுரத்தில் சிறுத்தை, செந்நாய் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது.
ஆத்துார் இரட்டை புளியமரம், கரடு, புதுப்பட்டி மில், தெப்பக்குளம், நரசிங்கபுரம் வழித்தடத்தில் அடுத்தடுத்து சிறுத்தை வந்து செல்வது வழக்கமாக உள்ளது. அப்போது பிடிபடும் நாய்கள், ஆடுகளை துாக்கி சென்று விடுகிறது. அறிவுடயான் கோயில் அருகே 2 நாய்களை தாக்கியுள்ளது'' என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் வனத்துறையினர் மாலை, இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டத்தை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment