திண்டுக்கல்லில் நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு மத நல்லிணக்க கந்தூரி விழா:
நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள பள்ளிவாசலில் மத நல்லிணக்க கந்தூரி விழா நடைபெற்றது.
இவ்விழாவில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டு, சுமார் 15,000 பேருக்கு முட்டையுடன் கூடிய நெய் பிரியாணி மற்றும் தால்சா வழங்கப்பட்டது.
மத நல்லிணக்கத்தோடு நடைபெற்ற இவ்விழாவில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் நீண்ட வரிசையில் நின்று முட்டை மற்றும் நெய் பிரியாணி பெற்று சென்றனர், தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment