திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தையுடன் வீர தமிழச்சி விருது பெற்ற இளம்பெண் மனு
அந்த மனுவில் தெரிவித்து இருப்பதாவது நத்தத்தை சேர்ந்த ரேணுகாதேவி என்பவர் இளநிலை பட்டதாரி ஆவார். இவர் கடந்த 30 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளை வளர்த்து 170 ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டு 2017- ம் ஆண்டு வீர தமிழச்சி என்ற விருதை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றார்.
இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வரும் நிலையில் கணவர் சிவா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் காலை இழந்து விட்டார். இதனால் தனது வாழ்வாதாரம் முழுவதும் முடங்கிப் போய்விட்ட காரணத்தால்
தமிழக அரசு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment