கோயமுத்தூரில் இருந்து மதுரை செல்லும் வழியில் ஒட்டன்சத்திரத்தில் கவர்னருக்கு வரவேற்பு
தமிழக ஆளுநர் R.N.ரவி கோயமுத்தூரில் இருந்து மதுரை செல்லும் வழியில்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகைக்கு வருகை புரிந்தார் அங்கு அவருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் R.N.ரவி ஏற்றுக்கொண்டார்.
பிறகு சிறிது நேரம் நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகையில் ஓய்வு எடுத்த பின்னர் மீண்டும் மதுரை நோக்கி காரில் புறப்பட்டு சென்றார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment