திண்டுக்கல் வத்தலகுண்டு அருகே தனியார் கல்லூரி சார்பில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என தனித்தனியாக நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தினை சென்னை லெதர் தொழிற்சாலை சேர்மன் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
10 வயது முதல் ஆண் பெண் சிறுவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். வத்தலகுண்டு காளியம்மன் கோவிலில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் 10 கிலோமீட்டர் கடந்து சிங்காரக்கோட்டை கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது.
போட்டிகள் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த போட்டியாளர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment