திண்டுக்கல் அருகே போக்சோவில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20 ஆண்டுகள் சிறை ரூ.50 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக சௌந்தர்ராஜன்(56) என்பவரை தாலுகா காவல்துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று நீதிபதி அவர்கள் சௌந்தர்ராஜனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment