தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேச்சு நடிகை கஸ்தூரி மீது திண்டுக்கல் நாயுடு நாயக்கர் பேரவை சார்பில் வழக்கு பதிவு செய்யக்கோரி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு
நடிகை கஸ்தூரி கடந்த 3-ம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் பிரமாணர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக சர்ச்சைக்குள்ளான வகையில் பேசி இருந்தார்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திண்டுக்கல் நாயுடு நாயக்கர் பேரவை சார்பில் நடிகை கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மனு அளித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment