நத்தத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை, ரூ.1,05,000 அபராதம்
திண்டுக்கல், நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த தஞ்சாவூரை சேர்ந்த முருகானந்தம் (எ) முருகன்(33) என்பவரை நத்தம் போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று நீதிபதி அவர்கள் முருகானந்தத்திற்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 3 ஆண்டுகள் சிறை, ரூ.1,05,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment