அய்யலூர் அருகே தெரு நாய்கள் கடித்து ஆடுகள் மற்றும் கோழிகள் பலி நடவடிக்கை எடுக்க கிராமத்தினர் கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள அய்யலூர் கிராமத்தில் வேங்கனுரில் வசித்து வரும் விவசாயி சக்திவேல். இன்று காலை சக்திவேல் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளையும், கோழிகளையும் தெரு நாய்கள் கூட்டாக சேர்ந்து கடித்து குதறின. இதில் கோழிகள் மற்றும் ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கிராமத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment