திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் மயங்கி விழுந்து அகோரி கலையரசன் தந்தை மரணம்
திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் தேனி போடி மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த பொன்னையா மகன் ரவிவர்மா(54) இவர் குடிபோதையில் மயங்கி விழுந்து இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்தவர் அகோரி கலையரசன் தந்தை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து ரவிவர்மா மனைவி தேவி அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment