வேடசந்தூர் அருகே குடகனாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் வழியாக செல்லும் குடகனாற்றின் குறுக்கே அழகாபுரியில் கட்டப்பட்டுள்ள குடகனாறு அணை 27 அடி கொண்டது. அணையின் நீர்மட்டம் 25 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 29 கன அடி தண்ணீர் வருகிறது.
அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என்பதால் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு உதவி பொறியாளர் மகேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment