கொடைரோடு டோல்கேட் அருகே முறையான ஆவணங்களின்றி அதிக பாரம் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் ரூ.2 லட்சம் அபராதம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட்டில் திண்டுக்கல் பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 2 லாரிகள் துாத்துக்குடியிலிருந்து பாளையம் செல்வதற்காக அதிக பாரம் ஏற்றி வந்தன.
ஆய்வில் ரோடு வரி செலுத்தியது உட்பட பல ஆவணங்கள் இல்லை. இரு லாரிகளையும் பறிமுதல் செய்து ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment