திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திங்கட்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இதை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் வரும் 11ஆம் தேதி (திங்கட்கிழமை) நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் செயலாளர் கென்னடி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment