தனியார் மதுபான கடையில் அரசு பேருந்து நடத்துநர் மீது கொலைவெறி தாக்குதல் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வண்டி கருப்பண்ணசாமி கோவில் எதிரே உள்ள ஸ்டார் ரெக்கிரியேஷன் கிளப் மதுபான விடுதியில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர்.
இதில் தங்கமாபட்டியை சேர்ந்த அரசு பேருந்து நடத்துநர் கண்ணதாசன் மீது ஒரு தரப்பினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த கண்ணதாசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment