வேடசந்தூர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலையத்தில் வையம்பட்டியை சேர்ந்த பிலோமினா(22) வேடசந்தூரை சேர்ந்த அடைக்கலராஜ்(30) ஆகிய இருவரும் 2 1/2 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இன்று திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு பாதுகாப்பு கேட்டு வேடசந்தூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
வேடசந்தூர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியபோது பிலோமினாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து,
இடையூறு செய்யக்கூடாது என்று எழுதி வாங்கிக்கொண்டு காதல் ஜோடியை சுதந்திரமாக அனுப்பி வைத்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment