திண்டுக்கல் அருகே செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் தப்பி சென்றபோது கீழே விழுந்து கால் முறிவு மருத்துவமனையில் சேர்ப்பு
திண்டுக்கல் அகரம் பாலம் அருகே நடந்து சென்ற அதே பகுதி சேர்ந்த மோகன் என்பவரிடம் சுள்ளான்மாதவன்(25) என்பவர் பட்டாகத்தி காட்டி கொலை மிரட்டல் விடுத்து கழுத்தில் அணிந்து இருந்த 1 1/2 பவுன் தங்க செயினை பறித்து சென்றது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டபோது GTN.கல்லூரி பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிக்கு போலீசார் சென்ற போது போலீசாரை கண்ட சுள்ளான்மாதவன் பாறையில் இருந்து குதித்து தப்பி ஓட முயற்சித்த போது கீழே விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இவர் பிரபல ரவுடி என்று தெரிந்தும் போலீசார் மனிதாபிமான அடிப்படையில் சுள்ளான் மாதவனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment