கொடைரோடு அருகே மாமனார் வீட்டிற்கு தீ வைத்த போலீஸ் ஏட்டு கைது
திண்டுக்கல் கொடைரோடு அருகே எ.புதூர் பகுதியை சேர்ந்த குணசேகர் இவரது மகள் கலா இவரது கணவர் தங்கமுனியாண்டி பழனி தாலுகா காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக காவலர் தங்கமுனியாண்டி மாமனார் குணசேகர் வீட்டிற்கு தீ வைத்தார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் குருவத்தாய் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக தலைமை காவலர் தங்கமுனியாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment