திண்டுக்கல் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் கல்லூரி உதவி பேராசிரியரின் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு
திண்டுக்கல் மேற்கு மரியானாதபுரம் மைக்கேல்ஆண்டவர் குருசடி தெரு பகுதியை சேர்ந்த தர்மர்(40) இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது தொடர்பாக தர்மர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இது குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அப்பகுதியில் கடந்த 5 நாட்களில் 2 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment