அய்யலூர் அருகே அரிவாளை வைத்து பெண்ணை மிரட்டிய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஒருவர் கைது
திண்டுக்கல் அய்யலூர் அருகே வேங்கனூர் களத்துவீடு பகுதியைச் சேர்ந்த முத்துவேங்காயி(37) இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் (எ) ராமலிங்கத்திற்கும் இடையே இடப் பிரச்சனை சில ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் முத்துவேங்காயின் வீட்டிற்கு அரிவாளுடன் சென்ற ரமேஷ், முத்துவேங்காயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment