வத்தலகுண்டுவில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.80 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த 2020-ம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சக்திவேல்(37) என்பவரை வத்தலகுண்டு போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் வத்தலகுண்டு போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று நீதிபதி அவர்கள் சக்திவேலுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment