ரெட்டியார்சத்திரம் பகுதியில் தொடர்ச்சியாக வீட்டை உடைத்து கொள்ளையடித்தல், இருசக்கர வாகனம் திருடிய 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள பிரபல திருடன் கைது 4 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல்
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ச்சியாக இரவில் வீட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து எஸ்பி.பிரதீப் உத்தரவின் பேரில் டிஎஸ்பி. கார்த்திகேயன் மேற்பார்வையில் ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் தலைமையில் சார்பு ஆய்வாளர் காதர்மைதீன் காவலர்கள் வேளாங்கண்ணி, கார்த்திக்ராஜன், ஜோசப்மோரிஸ்ராஜ், காங்குமணி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் மற்றும் சைபர் கிரைம் காவலர்கள் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை, மேலூர் சேர்ந்த பெரியசாமி (எ) பொட்டுக்கடலை(25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள், கத்தி, கையுறை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர் மீது திண்டுக்கல் மதுரை திருப்பூர் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment