வடமதுரை அருகே சித்த மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 6 1/2 பவுன் தங்க நகை பணம் கொள்ளை
திண்டுக்கல் தாமரைப்பாடி நவீன் நகரை சேர்ந்த ஹபிப்ரஹ்மான்(60) சித்த மருத்துவர். இந்நிலையில் குடும்பத்துடன் தனது மகள் வீட்டிற்கு வேல்வார்கோட்டைக்கு சென்றவர் திரும்பி வீடு வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் கதவின் பூட்டு உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து 6 1/2 தங்கநகை, ரூ.2 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தது தெரிய வந்ததை தொடர்ந்து வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வடமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment