திண்டுக்கல் அதிமுக அலுவலகத்தில் கள ஆய்வு கூட்டம் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்
திண்டுக்கல் அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கழகங்கள் மற்றும் சார்புஅமைப்புகளின் பணிகள் செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு மற்றும் அதிமுக உறுப்பினர்கள் உரிமைச் சீட்டுகள் அதிமுக உறுப்பினர்கள் அனைவரிடமும் முழுமையாக சென்றடைந்து விட்டதா என ஆய்வு செய்யும் பணி கள ஆய்வு கூட்டம் அதிமுக பொருளாளர் சீனிவாசன் தலைமையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கள ஆய்வுக் கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் மருதராஜ், அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment