வத்தலகுண்டு அருகே தபால் அலுவலகத்தில் ரூ.51 லட்சம் மோசடி - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 25 November 2024

வத்தலகுண்டு அருகே தபால் அலுவலகத்தில் ரூ.51 லட்சம் மோசடி


வத்தலகுண்டு அருகே தபால் அலுவலகத்தில் ரூ.51 லட்சம் மோசடி


திண்டுக்கல் வத்தலகுண்டு தும்மலப்பட்டி தபால் அலுவலகத்தில்  முனியாண்டி(47) பணியாற்றி வந்தார் இவர் செல்வமகள் சேமிப்பு திட்டம், சிறு சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் பொதுமக்கள் பணத்தை செலுத்தியதை  வசூலித்து பணத்தை தபால் அலுவலகத்தில் செலுத்தாமல் போலி ஆவணங்களை தயாரித்து பணம் செலுத்தியவர்களுக்கு வழங்கி வந்தார். 2024 செப்டம்பரில் ஒருவர் தபால் அலுவலக கணக்கை சரி பார்த்த பொது அவர் செலுத்திய தொகையை விட ரூ. 50,000 குறைவாக இருந்தது தெரிந்தது. தபால் அலுவலக அதிகாரிகளிடம் தெரிவிக்க விசாரணையில் முனியாண்டி பண மோசடியில் ஈடுபட்டது தெரிந்ததை அடுத்து ரூ. 50,000 வாங்கி சம்பந்தப்பட்ட பயனாளியிடம் வழங்கப்பட்டது. 


இதை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து முனியாண்டி பணியாற்றிய காலங்களில் அவர் கையாண்ட கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் 85 பயனாளி களிடமிருந்து ரூ.51 லட்சம் கையாடல் செய்திருப்பது தெரிந்தது. திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்க போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவான முனியாண்டியை தேடி வருகின்றனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம்  தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி

No comments:

Post a Comment

Post Top Ad