அம்மைநாயக்கனுாரில் கூடுதலாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற 5 ஷேர் ஆட்டோக்கள் பறிமுதல் ரூ.1.5 லட்சம் அபராதம்
திண்டுக்கல் அம்மைநாயக்கனுார் பகுதியில் பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் அலுவலர்கள் ஆய்வு செய்தபோது அதிகளவில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோக்களை மடக்கினர்.
விசாரணையில் தகுதிச்சான்று உள்ளிட்ட முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாதது தெரிந்தது. 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment