அம்மையநாயக்கனூரில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளை
திண்டுக்கல் அம்மையநாயக்கனூர் பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்த அழகேசன்(60) இவரது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோக்களை உடைத்து பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகை, ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளை அடித்து சென்றனர்.
இதுகுறித்து அழகேசன் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அம்மனை நாயக்கனூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடைபெற்றது.
மேற்படி சம்பவம் குறித்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment