அம்மையநாயக்கனூரில் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது 2 நாட்டு துப்பாக்கிகள், 13 தோட்டாக்கள் பறிமுதல்
திண்டுக்கல் அம்மையநாயக்கனூர் பகுதியில் ரேடியன் பள்ளிக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது அம்மைநாயக்கனூர், பாலாம்பட்டி பகுதியை சேர்ந்த பீட்டர் மகன் ஜான்சாமுவேல்(65) மற்றும் ராமராஜபுரம் பகுதியை சேர்ந்த வீரைய்யா மகன் முருகன்(40) ஆகிய இருவரும் கள்ளத்தனமாக நாட்டு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள், 13 தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment