வேடசந்தூர் அருகே ரூ.1,70,000 மதிப்புள்ள கான்கிரீட் சீட்டுகள் திருடிய 5 பேர் கைது 1 கார், 1 பிக்கப் வண்டி பறிமுதல்
திண்டுக்கல் வேடசந்தூர் , விட்டல்நாயக்கன்பட்டி அருகே ஆத்துப்பட்டி பகுதியில் கட்டப்பட்டு வரும் பாலத்தில் உள்ள ரூ.1,70,000 மதிப்புள்ள 90 கான்கிரீட் சீட்டுகள் திருடியது தொடர்பாக வேடசந்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து டிஎஸ்பி. இலக்கியா உத்தரவின் பேரில், வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், சார்புஆய்வாளர் அங்கமுத்து மற்றும் DSP.தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட தர்மபுரியை சேர்ந்த முருகன்(33), தண்டபாணி(35), சூர்யா(23), சேட்(28) கிருஷ்ணகிரியை சேர்ந்த மாரியப்பன்(24) ஆகிய 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கார், 1 பிக்கப் வண்டி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment