கொடைக்கானலில் 12 மீட்டர் நீளம் கொண்ட சுற்றுலா பஸ்களுக்கு தடை
திண்டுக்கல் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கொடைக்கானலில் 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள சுற்றுலா பஸ்களை இயக்க விதிக்கப்பட்ட தடையை வருகிற 18-ந்தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் நகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment