திண்டுக்கல்லில் விபத்தில் தலைநசுங்கி பெண் ஒருவர் பலி:
திண்டுக்கல் ஒன்றியம், சீலப்பாடி அருகே உள்ள அணைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்ராம். இவரது மனைவி பாண்டியம்மாள்(50). இவர் இன்று காலை தனது மகனுடன் சீலப்பாடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது வேகத்தடையில் ஏறி இறங்கிய போது தவறி கீழே விழுந்தார். இந்நிலையில் பின்னே வந்த லாரி, பாண்டியம்மாள் மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி,கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment