பழனி அருகே தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது
திண்டுக்கல் மாவட்டம் பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பழனி டிஎஸ்பி தனஞ்செயன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கீரனூர் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் நவீன்குமார் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த கோதைமங்கலம் பகுதியை சேர்ந்த அஜ்மத்கான் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து தடை செய்யப்பட்ட 15.5 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment