வடமதுரை அருகே தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மாரிமுத்து மற்றும் கண்ணன் கைது
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் பள்ளி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக டிஎஸ்பி.இலக்கியா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டு பள்ளி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மாரிமுத்து மற்றும் கண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment