வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்
ஜி.டி.என் கலைக்கல்லூரி
ஹோட்டல் மேனேஜ்மென்ட் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டுத்துறை
மாணவர்கள் உணவுத்திருவிழா மூலம் திரட்டிய
ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை கேரளா முதலமைச்சரிடம் வழங்கினர்
திண்டுக்கல்
ஜி.டி.என் கலைக்கல்லூரிய
ஹோட்டல் மேனேஜ்மென்ட், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டுத்துறை
மாணவர்கள் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை திருவனந்தபுரத்தில்
உள்ள அவரது சட்டசபை அலுவலகத்தில் நேரில் சந்தித்து
வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக சமீபத்தில்
உணவுத்திருவிழா மூலம் திரட்டிய
ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர்.
இந்நிகழ்வில் மாணவர்கள் உடன்
பேராசிரியர்கள் முனைவர் M.S.ராஜ்மோகன், செஃப் M.புரூஸ்லீ
மற்றும் முனைவர் V.மணி மகேஸ்வரன் இருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment