வடமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை ரூ.10 ஆயிரம் அபராதம்
திண்டுக்கல் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக வளைவிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் சுப்பிரமணி(62) என்பவரை வடமதுரை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திலகா தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண் அவர்கள் சுப்பிரமணிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை ரூ.10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment