வத்தலகுண்டுவில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை, ரூ.20 ஆயிரம் அபராதம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 16 October 2024

வத்தலகுண்டுவில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை, ரூ.20 ஆயிரம் அபராதம்


வத்தலகுண்டுவில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 27 ஆண்டுகள் சிறை, ரூ.20 ஆயிரம் அபராதம்


திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023-ம் ஆண்டு கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக நிலக்கோட்டை, மல்லனம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ்குமார்(20) என்பவரை வத்தலகுண்டு போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் வத்தலகுண்டு காவல் ஆய்வாளர் சிலைமணி தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி சரண் அவர்கள் குற்றவாளி விக்னேஷ்குமாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம்  தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி

No comments:

Post a Comment

Post Top Ad