நல்லாம்பட்டியில் குபேந்திர சுவாமிக்கு மண்டல பூஜை
திண்டுக்கல் நல்லாம்பட்டி கல்லோடை அருகே உள்ள குபேந்திர சுவாமிக்கு மண்டல பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதை யொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனையும், மகேஸ்வர பூஜையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குபேந்திர சுவாமிகள் நிர்வாக குழுத் தலைவர் ஜெயராமன் மற் றும் நிர்வாகிகள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்து
கொண்டு சாமி அன்னதானம் தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment