கோபால்பட்டி அருகே சாலையோர மரங்களை வெட்டிய 2 பேர் கைது வெட்டிய மரங்கள் வேன் பறிமுதல்
திண்டுக்கல் கோபால்பட்டி அருகே கணவாய்பட்டி பங்களாயொட்டிய சாலையோர மரங்களை சிலர் வெட்டி வேனில் ஏற்றிசென்றனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் கலாவதி சாணார்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து சாணார்பட்டி போலீசார் அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்த ரஞ்சித்(40), அவருக்கு உதவிய வேன்டிரைவர் கோபிநாத்தை(21) ஆகிய இரண்டு பேரை கைது செய்து வெட்டிய மரம் மற்றும் வேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டதில் நெடுஞ்சாலைத்துறையில் சாலையோரம் உள்ள காய்ந்த மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வாங்கிவிட்டு புளிய மரத்தை வெட்டியது தெரியவந்தது மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி
No comments:
Post a Comment