திண்டுக்கல்லில் போதைக்கு எதிரான 6ஆம் ஆண்டிற்கான விழிப்புணர்வு கபடி போட்டி நடைபெற்றது:
திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் இளங்கதிர் கபடி கழகம் சார்பில் மது மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான ஆறாம் ஆண்டு விழிப்புணர்வு கபடி போட்டு நடைபெற்றது. 14 வயது உட்பட்ட சிறுவர்கள் பங்கு பெற்ற இந்த போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து 17 அணிகள் பங்கு பெற்றன. இறுதியாக 27:17 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் புதுச்சத்திரம் பிசி பிரதர்ஸ் அணி முதல் பரிசான ரொக்க பணம் மற்றும் கோப்பையை தட்டி சென்றது. மேட்டுப்பட்டி இளங்கதிர் அகாடமி இரண்டாம் பரிசையும், பெத்தம்பட்டி ஸ்போர்ட்ஸ் மூன்றாம் பரிசையும், மேட்டுப்பட்டி எம் எம் ஸ்போர்ட்ஸ் அணியினர் நான்காம் பரிசையும் வென்றனர். மேலும் வெற்றி பெற்ற அனைத்து அணியினருக்கும் ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment