நிலக்கோட்டையில் அடகு கடை, தீபாவளி சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 பேர் கைது:
திண்டுக்கல், நிலக்கோட்டை அக்ரகாரபட்டியை சேர்ந்தவர் மணிகண்டபிரபு, பிரேம்குமார் இவர்கள் நிலக்கோட்டை பஸ்ஸ்டாண்ட அருகே நகை அடகு கடை, சிட்பண்ட், தீபாவளி சீட்டும் நடத்தி அப்பகுதியை சேர்ந்த பலரிடம் 2021 - 2022ல் தீபாவளி சீட்டில், சீட்டு தொகையை வழங்காமல் இருவரும் தலைமறைவாகினர். இந்நிலையில் நேற்று நிலக்கோட்டை பஸ்ஸ்டாண்ட் அருகே மணிகண்டபிரபு, பிரேம் குமார் இருப்பதை பார்த்த
சிலர் பணத்தை கேட்டுள்ளனர். இருவரும் பணத்தை தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலக்கோட்டை போலீசார் இருவரையும் கைது செய்தனர்,
தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர், பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment