மருதாநதி அணையில் இருந்து முதல்போக சாகுபடி பாசனத்திற்காக தண்ணீர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் திறப்பு
திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் ஊராட்சி ஒன்றியம், அய்யம்பாளையத்தில் மருதா நதி அணையில் இருந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதல்போக சாகுபடி பாசனத்திற்காக தண்ணீரை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலையில் இன்று திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், அய்யம்பாளையம் பேரூராட்சி தலைவர் ரேகா ஐயப்பன், மஞ்சளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் செல்வம், உதவி பொறியாளர், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment