மாணவ, மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் பொருட்டு ஒருங்கிணைப்புக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமை
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ, மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் பொருட்டும், பாதுகாப்பான சூழ்நிலையில் கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லுாரி முதல்வர்கள், தலைமையாசிரியர்களுடன் ஒருங்கிணைப்புக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர. பிரதீப், மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, முதன்மைக் கல்வி அலுவலர் புண்ணியகோடி, பள்ளி, கல்லுாரி முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment