எரியோடு அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது, ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள 710 லாட்டரி சீட்டுகள், ரூ.30 ஆயிரம் பணம் பறிமுதல் - தனிப்படையினர் நடவடிக்கை
திண்டுக்கல், எரியோடு அருகே கோவிலூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது அந்தப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த முருகேசன்(53) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ரூ.85 ஆயிரம் மதிப்புள்ள 710 அஸ்ஸாம் லாட்டரி சீட்டுகள், ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து எரியோடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment