திண்டுக்கல்லில் அரசு பஸ்சில் திருமண சவாரி புக் செய்தவர்களுக்கு இலவச மகளிர் டிக்கெட் விநியோகம் செய்தது தொடர்பாக போக்குவரத்து கழக அலுவலர்கள் 2 பேருக்கு மெமோ
திண்டுக்கல் நத்தம் ரோடு போக்குவரத்து கிளை 2க்குட்பட்ட அரசு பஸ்சை செப்.,15அன்று கோபால்பட்டி டூ ஆத்துாருக்கு கோபால்பட்டியைச் சேர்ந்த ஒருவர் திருமண சவாரிக்காக புக் செய்தார். அதன்படி அன்று காலை டிரைவர், கண்டக்டர் ஆத்துார் டூ கோபால்பட்டிக்கு திருமண சவாரிக்காக பயணிகளை ஏற்றி சென்றனர். அவர்களுக்கு அதற்குரிய டிக்கெட்டும் விநியோகம் செய்யப்பட்டது.
மீண்டும் மதியம் தற்காலிக டிரைவர், கண்டக்டர் அதே பஸ்சை எடுத்து சென்று பயணிகளை ஏற்றி வந்து இறக்கினர். அப்போது பயணிகளுக்கான டிக்கெட் வழங்காமல் இலவச மகளிருக்கு வழங்கப்படும் டிக்கெட்களை வழங்கியுள்ளனர்.
செம்பட்டி அருகே பயணிகள் இல்லாமல் வந்த போது பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர்கள் டிரைவர், கண்டக்டரிடம் விசாரித்தனர். அப்போது இலவச மகளிருக்கான டிக்கெட் வழங்கியது தெரிய வந்தது. அதையடுத்து இதில் தொடர்புடைய போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 2 அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு மெமோ வழங்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment