R.V.நகர் பகுதியில் டாக்டர் கலைஞர் அவர்களின் 101வது பிறந்தநாள் விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பரிசுகள் வழங்கினார்
திண்டுக்கல் R.V.நகர் பகுதியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக துணை பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி திமுக கொடி ஏற்றி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
இந்த நிகழ்வில் திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார்,திண்டுக்கல் மாநகர திமுக செயலாளர் திண்டுக்கல் மாநகராட்சி துணை ராஜப்பா, திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் பிலால், பகுதி கழக செயலாளர்கள் ஹக், ஜானகிராமன், ராஜேந்திரகுமார், சந்திரசேகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment