குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் செயல் திறனை மேம்படுத்துவது குறித்து திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கருத்தரங்கு
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ சட்ட வழக்குகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் / பயிற்சி திட்டம் சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள், காவல்துறை, மருத்துவத்துறை, குழந்தைகள் நல பாதுகாப்பு துறை, பள்ளி கல்வித்துறையை சார்ந்தவர்களும் நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
தலைமை நீதித்துறை நடுவர் கனகராஜ் வரவேற்பு உரையாற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
இக்கூட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் செயல் திறனை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment