திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் வெடிகுண்டு சோதனை
இந்திய திருநாட்டின் சுதந்திர தினம் நாளை 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதேவேளையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் ராக்கி உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment