அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு விழா அரங்கம் அமைப்பதற்கான கால்கோள் நாட்டும் விழா அமைச்சர் சேகர்பாபு சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் முன்னிலை
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுவதையொட்டி இன்று பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் முன்னிலையில் மாநாடு விழா அரங்கம் அமைப்பதற்கான கால்கோள் நாட்டும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, ஆதீனங்கள், குன்றக்குடி அடிகளார், துறை சார்ந்த அதிகாரிகள், பழனி திருக்கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment